சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை.! மோசமான விளைவை திமுக அரசு சந்திக்கும்- எச்சரிக்கும் அண்ணாமலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜகபர் அலி டிப்பர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் கொலை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Annamalai condemns the murder of a social activist who tried to prevent sand robbery kak

சமூக ஆர்வலர் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. திருமயம் பகுதியில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்.  ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்தும் உள்ளார். இதன் காரணமாக ஜகபர் அலிக்கு கனிம வள கொள்ளையர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகை முடித்து வீடு திரும்பியவர் மீது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலையே உயிர் இழந்தார். இந்த சம்பவம் முதலில் விபத்து என கருதப்பட்ட நிலையில் கல்குவாரியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Annamalai condemns the murder of a social activist who tried to prevent sand robbery kak

டிப்பர் லாரி மோதல்- சமூக ஆர்வலர் ஜகுபர் அலி பலி

இதனையடுத்து ஜகுபர் சாதிக் மரணத்தில் தொடர்புடைய கல்குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.  இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? 

Annamalai condemns the murder of a social activist who tried to prevent sand robbery kak

வழக்கை மடைமாற்ற முயற்சியா.?

ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios