38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த அதிர்ச்சி.!
அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் கல்லூரி மாணவர்களுக்கும் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
அதன் பிறகு, மீண்டும் கல்லூரிகள் திறக்கபட்டு நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. அதனால் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பல்வேறு ஏதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து தேர்வுகள் ஆன்லைன் வாயிலவே நடைபெற்றது. அப்போது பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2021 – 2022 கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வுகளில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 62% மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை