நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும் என்று கூறி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக வாதிட உள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்தார்.

தமிழக அரசின் சட்ட வரைவு தொடர்பாக தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கருத்து நேற்று தெரிவித்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகவும் கூறியுள்ளது. 

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரராக அரியலூரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா வாதிட உள்ளார். அவர் இதற்காக டெல்லி சென்றுள்ளார்.

செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவரின் தந்தை சண்முகம். அனிதா, ப்ளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். இவரது கட் ஆஃப் மதிப்பெண் 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட் ஆப் மதிப்பெண் 86 மட்டுமே பெற்றார். 

இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா வாதிட உள்ளார். அப்போது நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால், தனக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும். எனது கனவும் பறிவோய்விடும் என்பது குறித்தும் அனிதா உச்சநீதிமன்றத்தில் வாதிட உள்ளார். நீட் வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக அனிதா டெல்லி சென்றுள்ளார்.