மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தது பேரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனிதா உயிரிழந்ததை அடுத்து, அவரின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், மாநில அடிப்படையில் நடத்தப்பட்டிருந்தால் மாணவி அனிதா, மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பார் என்றும், அவரின் மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அனிதாவின் உறவினர்களும் இந்த சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குழுமூரைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மறியலின்போது, எடப்பாடி அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மாணவி அனிதா இறப்பு குறித்து டி.எஸ்.பி. மோகன்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த உள்ளனர். மாவட்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரபா, அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறினார்