கருணாநிதி உடல் எங்கையோ அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.. மெரினாவில் அடக்கம் செய்ய பாமக தான் காரணம் - அன்புமணி

 கலைஞர் கருனாநிதி இருந்தால் வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்துயிட்டு இருப்பார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Anbumani said that Chief Minister Stalin is giving wrong information regarding caste wise census KAK

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் போட்டிபோடுகின்றனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. இந்த நிலையில்,  பாமக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ராதாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழக மக்களுக்கு கிடைத்த முக்கியமான தேர்தல் என கூறியவர்,

இந்த தேர்தலில்  திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் குடும்பம் மட்டும் தான் வளர்ச்சி பெறும் பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அடுத்த மாதமே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் 10.5 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.  தமிழக அமைச்சர்கள் பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு வந்துள்ளார்கள்.  அது வாங்கினாலும் வாங்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.  மாம்பழ சின்னம் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். 

 சாதி வாரி கணக்கெடுப்பு- முதல்வர் தவறான தகவல்

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்போது எடுப்பீர்கள் என பாமக ஜி கே மணி கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதல்வர் தவறான தகவலை கூறியதாக விமர்சித்தார்.  பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நீதிமன்றம் ரத்து செய்யதுள்ளதாக தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும், இடஒதுக்கீட்டில் தவறான தகவலை பீகார் மாநில குறிப்பிட்டதால் அது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தவறான தகவலை சட்டமன்றத்தில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் மறுப்பு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். தேர்தல் வந்தால் மட்டுமே பாமக இடஒதுக்கீடு பற்றி பேசுவதாக திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.  ஆனால் கலைஞர் கருனாநிதி இருந்தால் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து  கையெழுத்துயிட்டு இருப்பார் என தெரிவித்தார். 

 மெரினாவில் அடக்கம் செய்ய பாமகவே காரணம்

முன்னாள் முதல்வர் கருனாநிதி மறைந்த போது  மெரினா கடற்கரையில் அடக்க செய்ய காரணம் பாமக போட்ட வழக்கை திரும்ப பெற்றதால் தான் செய்ய முடிந்தது என தெரிவித்த அவர்,  இல்லையெனில் வேறு எங்கையாவது கலைஞர் கருனாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பார் என அன்புமணி கூறினார். கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் வெட்ககேடு மரக்காணம் , செங்கல்பட்டில் நடைபெற்ற சாராய உயிரிழப்பிற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு வழக்கில் சிபி ஐ விசாரனை கொண்டு வரவேண்டும்.  சிபி சி ஐ டி விசாரனை மீது நம்பிக்கை இருந்தாலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் அவர்கள் இருப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios