தீபாவளிக்கு 11 நாட்களே உள்ளது..! போனஸ் என்னாச்சு..? பொதுத்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அன்புமணி

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபஒளி போனஸ் தொடர்பாக  தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Anbumani demands to give 25% bonus to public sector employees on the occasion of Diwali festival

தீபாவளி போனஸ் எங்கே..?

பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் தொடர்பாக தமிழக அரசு இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லையென தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, உடனடியாக குறைந்தபட்சம் 25% போனஸ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு்ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில்,  தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் ஆகியவற்றை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லையென தெரிவித்துள்ளார்.  இந்த விஷயத்தில் தேவையற்ற தாமதம் கூடாது! போனஸ், முன்பணம் ஆகியவை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்  பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக நிர்வாகங்களிடம் கடிதம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லையென்று தெரிவித்துள்ளவர்,

திறமையற்ற முதலமைச்சராக உள்ளார் ஸ்டாலின்..! அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை - இபிஎஸ்

Anbumani demands to give 25% bonus to public sector employees on the occasion of Diwali festival
25% போனஸ் கொடுக்க வேண்டும்

அரசுத் தரப்பின் மவுனம் ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார். தீபஒளி திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், போனஸ் மற்றும் முன்பணத் தொகை மூலம் தான் தீபஒளிக்கு தேவையான புத்தாடை உள்ளிட்ட பொருட்களை  தொழிலாளர்களால் வாங்க முடியும். இந்த அவசியத்தையும், அவசரத்தையும்  தமிழக அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.  தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது. தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீப ஒளி முன்பணம் வழங்க  அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும்! என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆளைகடிக்கும் அண்ணாமலை... நம்மவரை அமெரிக்காவில் அசிங்கப்படுத்துவியா. மநீம.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios