Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் கிளாஸ்ல கவனம் செலுத்துங்க... பப்ளிக் எழுதும் மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அட்வைஸ்!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என்று கருதாமல் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். 

anbhil mahesh advices students to concentrate in online classes
Author
Puthukottai, First Published Jan 17, 2022, 3:33 PM IST

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என்று கருதாமல் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

anbhil mahesh advices students to concentrate in online classes

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தயவு செய்து இதை விடுமுறை என்று கருதாமல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆசிரியர்கள் மூலமாக தமிழக அரசு யூடியூபில் 8,000 வீடியோக்களை அப்லோடு செய்து உள்ளது. அதனை பார்த்தும் தொடர்ந்து பாடங்களை படிக்க செய்ய வேண்டும். 31ஆம் தேதி வரை தொற்று அதிகமாகும் என்று அரசு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதன் அடிப்படையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அரசு என்ன சொல்கிறதோ அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அவர்களிடம் உள்ளது, அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

anbhil mahesh advices students to concentrate in online classes

கல்வி தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்றாலும் இந்த அரசு கல்வி தொலைக்காட்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம். வரும் காலங்களில் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தப்படும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு. இதற்காக விலக்கு வேண்டும் என்று சட்டப் போராட்டம் ஒரு வகையில் நடந்து கொண்டிருந்தாலும் மாணவர்களை தயார்படுத்துவதற்காக நாம் தமிழக அரசின் ஹைடெக் ஆய்வகம் மூலமாக பல பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது அதை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios