amrutha sent notice to apollo

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் உள்ளனவா?,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக வில் ஒரு மாபெரும் வெற்றிடம் நிலவி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் "தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதாவது அடிப்படை ஆதராமின்றி இந்த மனு உள்ளது என்றும், ஆதாரம் இருந்தால் மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவுரை கூறி, மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

இதனை தொடர்ந்து,ஜெயலலிதா மகள் என்பதை நிரூபிக்க,ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் உள்ளதா ? என அபோல்லோ மருத்துவமனைக்கு நோடீஸ் அனுப்பியுள்ளார் அம்ருதா.

தேவைப்படும் திசுக்கள் கொடுக்கப்பட்டால் தான், டிஎன்ஏ சோதனை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் அம்ருதா தெரிவித்து உள்ளார்.

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை செய்வது என்பது இயலாத ஒன்று என்று தெரிவித்த பின்பு,வேறு எதை வைத்து டிஎன்ஏ சோதனை செய்ய முடியும் என எழுந்த கேள்வியை அடுத்து, தற்போது அப்போலோ வை அணுகியுள்ளார் அம்ருதா.

இதற்கான பதில் கிடைக்கும் தருவாயில்,அம்ருதா டிஎன் ஏ சோதனைக்கு உட்படுத்த படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.