ஆம்புலன்சு அலறல் சத்தம் கேட்டவுடன் தனது பாதுகாப்பு வாகனத்தைய ஒதுக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஆம்புலன்சு சத்தத்தைக் கேட்டு, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாகனத்தையே மறித்து ஆம்புலன்சு செல்ல ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இவருக்கு நெட்டிசன்கள் மட்டுமல்லாது போலீஸ் துறையிலேயே பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 4ந்தேதி பெங்களூருவில் உள்ள டவுன்ஹால் பகுதியில் முதல்வர் சித்தராமையா கார் வந்தபோது,  ஆம்புலன்சுக்காக முதல்வரின் வாகனமே நிறுத்தப்பட்டு வழி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.

இவை எல்லாம், ஆம்புலன்சில் இருக்கும் ஒரு உயிரை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஏனென்றால், மனித உயிர் போனால் திரும்பி வராது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் மழுங்கடிக்கப்பட்டு இருந்த வி.வி.ஐ.பி. கலாச்சாரம் மீண்டும் முளைவிடத் தொடங்கியுள்ளது.

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானநிலையத்தில் இருந்து கோட்டைக்கு செல்லும் வழியில் திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அவரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் ஒரு ஆம்புலன்சு வாகனமும் சிக்கிக் கொண்டு, அலறல் ஒலி எழுப்பியும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் ஆம்புலன்சு செல்ல அனுமதிக்க வில்லை.

இதைப் பார்த்த இரு சக்கரவாகனத்தில் இருந்த சிலர், “ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுங்கள் சார்’’ என்றபோது, அதை காது கொடுத்து போக்குவரத்து போலீசார்  கேட்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் முதல்வர்எடப்பாடி ஊடங்களுக்கு பேட்டி கொடுக்க வேகமாக செல்வதற்காக நாங்கள் ஏன் காத்திருக்கவேண்டும் என்று பிரச்சினையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோவை இந்தியாடு டே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வி.வி.ஐ.பி. கலாச்சாரம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளது.

அதிலும் உயிர்காக்கும் ஆம்புலன்சு வரும்போதாவது, போக்குவரத்து போலீசார் யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் , ஒரு உயிர் காப்பாற்றப்படும்.