வாகனங்களுக்கும் இலவச பெட்ரோல் போடும்படி கூறி, மர்மநபர் ஒருவர் ரூ.50 ஆயிரத்தை பெட்ரோல் பங்கில் கொடுத்துள்ளார். அவரை வருமான வரித்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 5000 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதன் முலம் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்படும் என கூறப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மட்டுமே இன்று வரை, சாலையில் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் நாடு முழுவதும் கருப்பு பணத்தை வைத்திருந்த பலர், அதனை மாற்ற முடியாமல் குப்பை தொட்டிகளிலும், சாலைகளிலும், சுடுகாடுகளிலும் வீசி செல்கின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில், ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்ததும், பொதுமக்கள் அந்தபெட்ரோல் பங்க்கில் திரண்டு முண்டியடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்குக்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஒரு நபர் அங்குள்ள ஊழியர்களிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து, இங்கு வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் போடவேண்டும் என கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம், கருப்பு பணத்தை கொடுத்து சென்ற மர்மநபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
