தமிழரசு இதழை அனைத்து நூலகங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக அரசால் வெளியிடப்படும் “தமிழரசு” இதழுக்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்ப்பதுடன், அனைத்து நூலகங்களுக்கும் இதழை அனுப்ப வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

தரமணியில், தமிழரசு அச்சகத்திற்கு ரூ.6 கோடியே 23 இலட்சத்தில் புதிய அலுவலக அச்சக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இந்த அலுவலகம் மற்றும் அச்சகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார்.

அப்போது, ''தமிழரசு இதழுக்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் தமிழரசு இதழ் அனுப்பப்பட வேண்டும். தமிழரசு இதழ் தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கிடைத்து, அதை படித்து அவர்கள் பயனடைய வேண்டும்'' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்..