திருச்சி

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள துணை அஞ்சல் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் கோட்ட பொருளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.

“7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டிப்பது,

 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அரசின் கவனத்தை ஈர்க்க கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமாக கலந்து கொண்ட கிராமிய அஞ்சலக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.