கீழையூர் பகுதியில் அனைத்து விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது.
இந்த்அப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அ. நாகராஜன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி. தம்புசாமி பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் டி. செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் வி. சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் கே. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
வறட்சி நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.
வேலையில்லாத விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
