அந்தியூர்,

ஈரோட்டில் ஏழு கால்களுடன் பிறந்த கன்றுக் குட்டியை பொதுமக்கள் படையெடுத்துச் சென்று கண்டுவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (70).

இவர் தன்னுடைய வீட்டில் ஐந்து பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

அதில் ஒரு ஜெர்சி இன பசு மாடு சனிக்கிழமை அன்று கன்றுக்குட்டியை ஈன்றது.

அந்த கன்றுக்குட்டிக்கு 7 கால்கள் இருந்ததைக் கண்டதும் சின்னசாமி வியப்படைந்த்ஆர்.

எல்ல கன்றுக் குட்டிகளைப் போலவும் 4 கால்களும், மற்ற மூன்று கால்கள் முதுகில் இந்த கன்றுக் குட்டிக்கு இருக்கின்றன.

இந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவியது. உடனே சுற்றி இருக்கும் மக்கள் அந்த அதிசய கன்றை பார்த்துவிட வேண்டும் எண்ட்ட்ரு சின்னசாமியின் வீட்டிற்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயற்கையில் படைப்பில் அவ்வப்போது இதுபோன்ற அதிசயங்களும் நடந்த வண்ணம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. விலங்கிற்கு ஏழு கால்கள் என்பதால் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் பார்க்கும் மக்கள் மனிதனுக்கு 4 நால்கள் என்றவுடன் அருவருப்பாக பார்ப்பதும், அவர்களது பெற்றோரை ஏளனப்படுத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சின்னசாமி தன் வீட்டில் ஏழு கால்களுடன் பிறந்த் இந்த கன்று அதிர்ஷ்டம் என்றே கருதுகிறார்.