alcohol plant seized in nagarcoil train by police
நாகர்கோவிலில் இருந்து புனலூர் சென்ற பயணிகள் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவிலில் இருந்து புனலூர் சென்ற பயணிகள் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து புனலூர் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒருவர் கஞ்சா பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து ரயிலில் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த முஜுப் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
