ஜன.17ல் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - விழா கமிட்டி
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் போட்டியை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது
சிறுபான்மையினரின் கல்விக்கு தடை விதிக்கவே நிதியுதவி நிறுத்தம் - அமைச்சர் மஸ்தான்
இந்நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனிடையே இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் போட்டி குறித்தான ஆலோசனைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.
அரசு பள்ளிகளை மேம்படுத்த நடிகர்கள் உதவ வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல்வருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன் வழங்குவது குறித்து அரசே முடிவு செய்யும் என்றனர்.