Asianet News TamilAsianet News Tamil

தொடங்கியது உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு .. களத்தில் சும்மா கிழக்கும் காளையர்கள் !!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  சற்று முன் தொடங்கியது. இதில் முதல் மரியாதை செய்யப்பட்ட 3  காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்தப் போட்டிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

Alanganallur Jallikattu  started
Author
Alanganallur, First Published Jan 17, 2020, 8:43 AM IST

தை மாதம் பிறந்தாலே தமிழகர்களின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழகம் முழுவதும் இப்போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் புகழ்பெற்றவை.

Alanganallur Jallikattu  started

நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சற்று முன் தொடங்கியது.

இதனை அமைச்சர்  உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வுபெறற நீதிபதி மாணிக்கம் ஆகியோர்  தொடக்கி துவக்கி வைத்தனர்.முதல் மரியாதை செய்யப்பட்ட 3 காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன.

Alanganallur Jallikattu  started

இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 921 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். போட்டி துவஙகும் முன்னர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் அதனை ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Alanganallur Jallikattu  started

இதைத் தொடர்ந்து வரிசையாக காளைகள் வாடிவாசல் வழியாக களமிறக்கப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் அதிரடியாக அடக்கினர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Alanganallur Jallikattu  started

சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு, முதலமைச்சர்  மற்றும் துணை முதலமைச்சர்  சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. 10 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை பார்க்கும் வகையில்  காலரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios