ajith fans celebrate the idol at a cost of Rs.1 lakh
தஞ்சாவூர்
அஜித் குமாருக்கு சினிமாவில் கால் பதித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ரூ.1 இலட்சம் செலவில் அஜித்துக்கு சிலை வைத்து கும்பகோண ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிகர் அஜித்குமார் சினிமாத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அதனை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ரூ.1 இலட்சம் செலவில் சிலை அமைத்துள்ளனர்.
பைபர் மெழுகினால் மார்பளவில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், அஜித் குமார் உருவபடத்துக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
இந்த விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி கலந்து கொண்டு அஜித்குமார் சிலையை திறந்து வைத்தார். இதில் நடிகை டார்லிங் மற்றும் ஏராளமான அஜித்குமார் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கும்பகோணம் அஜித்குமார் ரசிகர் மன்ற நிர்வாகி தளபதிகுமரன் கூறியது: “தல அஜித் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் ரூ.1 இலட்சம் செலவில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை ரசிகர்கள் பார்வையிடும் வகையில் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அஜித்குமார் படம் வெளியாகும் போது அந்த திரையரங்கில் வைக்கப்படும்” என்று அவர் கூறினார்.
