ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்குள், பிற நெட்வொர்க்குக்கு மாற தேவையான யுபிசி எண் கிடைத்துவிடும் என ஏர்செல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏர்செல் டவர் கிடைக்காமல்,மக்கள் பெரும் சிரமத்தை  அடைந்து வருகின்றனர்

இது தொடர்பாக, அடுத்த சில தினங்களில் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் எங்கள் நிறுவனம் சார்பில் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனவும் ஏர்செல் தென் மண்டல சிஇஓ சங்கர நாராயணன் தெரிவித்து இருந்தார்.

செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. ஆனால்,பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் செல்போன் டவர்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக ஏர்செல் தென்மண்டல தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்திருந்தார்.

 

ஆனாலும் போர்ட்டல் எண் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதி பட்டு வருகின்றனர். இந்நிலையில்,விரைவில் அனைவருக்கும் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனவும் ஏர்செல் தென்மண்டல சிஇஓ சங்கர நாராயணன் தகவல் தெரிவித்து இருந்தார்.

இதுவரை 25 லட்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்டல் எண் பெற்றுள்ளதாகவும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதால் அனைவருக்கும் ஒரே நாளில் போர்ட்டல் எண் வழங்க இயலாது எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்குள், பிற நெட்வொர்க்குக்கு மாற தேவையான யுபிசி எண் கிடைத்துவிடும் என ஏர்செல் நிறுவனம் தெரிவித்து உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.