அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை... அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

AIADMK is not in alliance with BJP says Former Minister Jayakumar sgb

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது, அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், "அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. இதுதான் கட்சித் தலைமையின் முடிவு. எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தாவிட்டால், அதிமுக பதிலடி கொடுக்கும். அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழ் தான் வாக்குகள் வாங்குவார். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மதிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

ரூ4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு! கபில் சிபல் ஆஜராக இபிஎஸ் எதிர்ப்பு-உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

பாஜகவுக்குக் காலே இல்லை; பிறகு எப்படி கால் ஊன்றும்? அதிமுகவுக்கு தேவையில்லாத சுமை பாஜக. பாஜக தேவையில்லை என கட்சித் தலைமை முடிவு செய்துவிட்டது என்று பாஜகவை சாடிய ஜெயக்குமார், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தார்.

AIADMK is not in alliance with BJP says Former Minister Jayakumar sgb

"அண்ணாமலை அரசியலுக்கே தகுதி இல்லாதவர்; பாஜக தலைவர் பதவிக்கும் தகுதி இல்லாதவர்; அண்ணாவை விமர்சித்த அண்ணாமலையை இனி ஏற்க முடியாது. சிங்கக் கூட்டத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிடுகிறது; அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் அண்ணாமலை மீது தாறுமாறாக விமர்சனங்கள் பறக்கும். அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தால், தேர்தலில் தொண்டர்கள் எப்படி பணியாற்றுவார்கள்?" என்று கூறினார்.

பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்து வந்ததால், அதிமுக - பாஜக இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா கூறிய பகுத்தறிவுக் கருத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அதற்குப் பின் அண்ணா முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் குறிப்பிட்டார். இதனால் அதிமுக - பாஜக இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என கூறுவதை தமிழகத்தில் தான் கேள்விப்படுகிறேன் - ஆர்.என்.ரவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios