again rain in tamil nadu
கடந்த 1௦ நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதாவது தென்மேற்கு பருவ மழையால் இதுவரை 22.1 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது எனவும், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ஏரிகளில் வெகுவாக அதிகரிக்கும் தண்ணீர்
தொடர்ந்து ஒரு வார காலமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால், சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி புழல் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் சற்று அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில்,வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மீண்டும் ஏரிகளில் நீர் அதிகரிக்கும். விவசாயத்தை நம்பி இருக்கும் தமிழக விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்
