again fire in kumbakonam temple

சிவராத்திரியன்று மீண்டும் கோவிலில் தீ...! பக்தர்கள் வேதனை...!

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கோவில்களில் தீ ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,கோவில்களில் தொடர்ந்து தீ பிடிக்கும் சம்பவம் அனைவரையும் வேதனை கொள்ள செய்துள்ளது.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு சிவராத்திரியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை யொட்டி நடன கலைஞர்களின் கலை நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களுக்காக உணவு தயாரிக்கும் போது காஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் திடீரென தீப்பற்றியது.

இதனை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் ஈர சாக்கு பைகளை கொண்டு தீயை அணைத்தனர்.

ஆனாலும் பக்தர்கள் ஒரு விதமான வேதனை உணர்ந்தனர்.இது போன்று அடிக்கடி கோவில்களில் மட்டும் தீ பிடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.