தருமபுரி

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இங்கு குளிக்க தடை போடப்பட்டுள்ளது. இருந்தும் இங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பார்த்து இரசித்தனர்.

சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவிகளில் குளித்துவிட கூடாது என்பதற்காக காவலாளர்கள் நடைபாதை நுழைவு வாயிலில் கயிறு கட்டி காவல் காத்தனர். நேற்று மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் 117 அடியை தாண்டியது. இதனால், ஒகேனக்கல்லில் அனைத்து இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு இரசித்தனர்.

இங்கு 14-வது நாளாக பரிசல் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு மிகவும் விருப்பமான பரிசல் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.