திருநெல்வேலியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், ஆயிரத்து ஐநூறு சேலைகளை திருடிய பெண்ணை, கடை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை, சிவந்திபட்டி அதிமுக ஊராட்சி கழக செயலாளரும் பாளை ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் ஆறுமுகம். இவரது மனைவி உமா. இவரும் மற்றும் சிலரும் நெல்லையில் உள்ள போதீஸ் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, அங்குள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி கடையில் சேலைகளை திருடி உள்ளனர். இவர்கள் சேலையை திருடியதைக் கண்ட உழியர், உமா மற்றும் அவருடன் வந்தவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார், இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜவுளி கடையில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர்ந்து 10 நாட்களாக சேலைகள் திருடப்பட்டு வந்துள்ளதாக கூறியுள்ளனர். மொத்தம் 1500 சேலைகளை திருடியதாக அவர்கள் கூறினர். இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
