அரவக்குறித்து தொகுதியில், வாக்குச்சாவடியில் இருந்த வெளியூர் அதிமுகவினர் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக உள்பட பல கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை7 மணி முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து செல்கின்றனர்.
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி, பள்ளப்பட்டி வாக்குச்சாவடி எண் 221, 231 ஆகிய மையத்தில் அதிமுக சார்பில் உள்ள பூத் ஏஜென்டுகள், வெளியூரை சேர்ந்தவர்கள், என புகார் எழுந்தது. இதுகுறித்து திமுகவினர், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாக்கு மையத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், அங்கிருந்த அதிமுக பூத் ஏஜென்டுகளை அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றினர். இச்சம்பவம், அந்த தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
