Edappadi Palanswami Gives Dinner at his House : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொடுக்கப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் செங்கோட்டையன் உள்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

Edappadi Palanswami Gives Dinner at his House : தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமித் ஷாவிற்கு தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதற்கும் முன்னதாதக தவெக மற்றும் அதிமுக இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பாஜக அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அதிமுக எம் எல் ஏக்களை உற்சாக வைத்திருக்கும் வகையில் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் வகையிலும் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் செல்லூர் ராஜூ, தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த விருந்து நிகழ்ச்சியில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அவரைப் போன்று சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பவானிசகார் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனும் புறக்கணித்துள்ளனர்.

அண்மை காலமாக எடப்படி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் பொது நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இதற்கு பாஜக உடன் கூட்டணி வைத்ததே முக்கிய காரணாமாக சொல்லப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு முன்னதாக அண்ணாமலை மீது அதிருப்தியில் இருந்த எடப்பாடி பழனிசாமி இனிமேல் பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்த நிலையில் இப்போது திடீரென்று பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே விவாவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அவர்களை எப்போதும் ஒற்றுமையாக வைத்திருக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்துள்ளார். அந்த விருந்தில் சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, இறால் தொக்கு, மீன் வறுவல், முட்டையும், சைவ விருந்தில் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், அரிசி, சோறு, சாம்பார், ரசம், அவியல், பாயாசம், கூட்டு என்று தடபுடலாக விருந்து கொடுக்கப்பட்டுள்ளது