உங்களுக்கு 15 வயது ஆயிடுச்சா? உடனடியா ஆதார் சேர்க்கை மையத்துக்கு போங்க…
தமிழகத்தில் 15 வயது பூர்த்தியான நபர்கள் இன்று முதல் ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று உயிரிய தகவல்களை அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்க ஏதுவாக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை சார்பில், மாநிலம் முழுவதும் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் கடந்த மாதம் 31-ம் தேதி வரை 9 லட்சத்து 96 ஆயிரத்து 924 பேருக்கு ஆதார் எண்ணுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரிய தகவல்களை 2 ஆண்டுகளுக்குள் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே 15 வயது பூர்த்தி அடைந்த, ஆதார் எண் பெற்றவர்கள் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு இன்று முதல் நேரில் சென்று உயிரிய தகவல்களை அளித்து பயனடைய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST