Actor Kamal Hassan apologized for mentioning the name of actress in the case of actor Dilip
நடிகர் திலீப் கைது விவகாரத்தில் நடிகையின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கோரினார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் கூறி வந்தன.
ஆனால் அதற்கு திலீப் பகிரங்கமாக மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து திலீப்பிடம் நீண்ட நேரம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், திடீரென அவரை கைது செய்தனர். இதனிடையே நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகையின் பெயரை நடிகர் கமலஹாசன் குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டதற்கு கமலஹாசனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது. இந்நிலையில், நடிகர் திலீப் கைது விவகாரத்தில் நடிகையின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் பெண்களை மதிப்பவன் நான் என்றும் காரணமின்றி எதர்காகவும் வளைந்து கொடுப்பவன் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
