நடிகர் கமல் ஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கூறியதை அடுத்து, அவர் மீது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னுடைய அரசியல் பயணம் எப்போதோ தொடங்கியதாகவும் கமல் கூறியிருந்தார்.

நடிகர் கமல் ஹாசன், நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்கு கமல் கருத்துகளைக் கூறி வருகிறார். மாணவி அனிதா உயிரிழந்தது குறித்து மத்திய - மாநில அரசுகளை விமர்ச்சித்திருந்தார். 

இந்த நிலையில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல் ஹாசனை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

நடிகர் ரஜினிகாந்தை சில தினங்களுக்கு முன்பு நக்மா, அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது, நடந்த சந்திப்பு குறித்து ரஜினியை காங்கிரஸ் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனை, நக்மா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.