actor association building case postponed
நடிகர் சங்க கட்டிட வழக்கை வரும் 27-ம் தேதி ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி. நகரில் நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளது. இந்த நிலையில் கட்டிடம் வர உள்ள இடத்தில் பொது சாலையில் 33 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீரங்கன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சங்க கட்டிடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்கும் வரை கட்டுமானப் பணி மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது. 33 அடி சாலையில் தபால் நிலையம் இருந்தது பற்றிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தடை விதிப்பு தொடர்பான வழக்கை 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
