Asianet News TamilAsianet News Tamil

PM Modi : பிரதமரின் வருகை.. தமிழ் மக்கள் மீது உள்ள பாசத்தை பிரதிபலிக்கிறது - நடிகர் சரத்குமார் உருக்கம்!

Narendra Modi : பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.

Actor and Politician Sarathkumar welcomes prime minister modi to tamilnadu see what he said in twitter ans
Author
First Published May 30, 2024, 7:22 PM IST

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் ஆன்மீக பயணமாக தமிழகம் வந்துள்ளார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், நாளை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியான மேற்கொள்கிறார். 

அதன் பிறகு ஜூன் 1ம் தேதி திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லிக்கு விமான மூலம் புறப்படுகிறார். இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் தனது தடைபட்டுப்போன தனது தமிழக ஆன்மீக பயணத்தை மேற்கோள் தமிழகம் வரவிருக்கிறார். புதுக்கோட்டையில் உள்ள திருமயம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.

இனியும் ஜி.கே.வாசனோடு பயணிக்க முடியாது.. பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்டி அடித்த தமாகா நிர்வாகி

கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்கிய மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, வரும் ஜூன் மாதம் 1ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் மோடியின் தமிழக வருகை குறித்து பேசியுள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில் "ஆன்மீக பூமியான தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்கள் வருகை தரும் போதெல்லாம், பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் மோடிஜி அவர்களை வரவேற்று மகிழ்ச்சியுறுவார்கள். ஜூன் 4ந்தேதி அன்று மீண்டும் மோடிஜி தலைமையிலான ஆட்சி அமையப் போவது உறுதி. 3 வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்க உள்ள தருணத்தில், பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மோடி ஜி அவர்களின் வருகை  தமிழக மக்கள் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர் கொண்டுள்ள அளப்பரிய பாசத்தை காட்டுகிறது என்பதை நாம் உணரலாம்" என்று அந்த பதிவில் உருக்கமாக எழுதியுள்ளார்.

சங்கராச்சாரியாரை கைது செய்த ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? திராவிட தலைவரா? கோவையில் துண்டு பிரசுரங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios