புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை கையப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேலதேமுத்துபட்டியில் விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை கையப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மு.மாதவன் தலைமைத் தாங்கினார். இவரின் தலைமையில் மேலதேமுத்துபட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகம் திரண்டு  சென்று அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அதற்கு காவலாளர்கள் அனுமதி மறுத்தனர். அதனையடுத்து ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், "வாரிசுகளுக்கு தெரியாமல் வயதான விவசாயிகளை ஏமாற்றி பல ஏக்கர் நிலங்களை கையப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் வலியுறுத்த உள்ளனர்.