அடுத்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், திருவாண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடரும் மழை
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் கே. பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுவை உள்ளிட்ட இடங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.
அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செ.மீட்டர் மழை பெய்துள்ளதாக கூறினார். அடுத்து வரும் இரு தினங்களில் 21,22 தேதிகளில் அனேக இடங்களில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள்,

மழைக்கு காரணம் என்ன.?
திருவாண்ணாமலை,ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். குமரி கடல் தென் மேற்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க பலத்த காற்று 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும் எனவே அந்த பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்த செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். கடந்த 73 ஆண்டுகளில் மீனம்பாக்கத்தில் இரண்டாவது பெரிய மழை பெய்துள்ளதாக தெரிவித்தவர், நுங்கம்பாக்கம் பொறுத்தவரை மூன்றாவது அதிகபட்ச மழை என குறிப்பிட்டார்.
1996 இல் ஜூன் 14 ஆம் தேதி மீனம்பாக்கம் பகுதியில் 282.2 மில்லி மீட்டர் மழை பதிவு இருந்தது. இன்று 158.2 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இது இரண்டாவது பெரிய மழை அளவு. நுங்கம்பாக்கம் பகுதியை பொறுத்தவரை 1996 இல் ஜூன் 14 ஆம் தேதி 347.9 மில்லி மீட்டர், 1991 இல் ஜூன் 5 ஆம் தேதி 191.9 மில்லி மீட்டர் பதிவு ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்
