Asianet News TamilAsianet News Tamil

இனி 5000 ரூபாய் பரிசு உங்களுக்கு.. சாலை விபத்தினை தவிர்க்கலாம் - அதிரடி அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் தேசிய அளவில் ஆண்டு தோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சாலை விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. 

Accident new Scheme
Author
Tamilnadu, First Published Nov 27, 2021, 8:12 PM IST

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் தேசிய அளவில் ஆண்டு தோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சாலை விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சாலை விபத்தில் சிக்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை குறைக்கும் விதத்தில், கடந்த அக்டோபர் மாதம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் நபர்களுக்கு, 5000 ரூபாய்  பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.  இந்த புதிய திட்டமானது, அக்டோபர் 15, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தின் வாயிலாக, தேசிய அளவில் ஆண்டு தோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்படும்.
ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அனைத்து விபத்துகளும் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும், ’மாவட்ட அளவிலான மதிப்பீடு குழு’ ஆய்வு செய்யும். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.5000 பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யபடும் என்று தமிழக  அரசு குறிப்பிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios