Asianet News TamilAsianet News Tamil

பேருந்து ஓட்டுனர் அலட்சியம் - அநியாயமாக போனது மாணவர் உயிர்

accident in ECR
accident in ECR
Author
First Published Jul 7, 2017, 2:36 PM IST


சென்னையில் பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் மாணவர் மீது பேருந்து ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் தொடர்ந்து அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. நேற்று மாலை தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் இளைஞர் ஒருவர் தண்ணீர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானார்.

அதில் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் மற்றுமொரு விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடற்கரை சாலையில் இன்று அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக கல்லூரி மாணவர் மீது பேருந்து மோதியதன் காரணமாக மோட்டார் பைக் சரிந்ததில் மாணவர் மீது பேருந்து ஏறி உயிரிழந்தார்.

திருவல்லிக்கேனி சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தினமும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் விக்னேஷ் சென்று வருவது வழக்கம். இவர் கல்லூரிக்கு செல்வதற்கு திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேருந்தில் செல்வது வழக்கம். 

இன்று காலையும் வழக்கம் போல் ஹெல்மெட் அணிந்து கொண்டு முறையாக கடற்கரை சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த விக்னேஷின் பைக் மீது பக்காவாட்டில் வந்த பேருந்தின் ஓட்டுனர் அலட்சியம் காரணமாக மோட்டார் பைக் மீது உரசியதில் விக்னேஷ் சரிந்து கீழே விழுந்தார்.இதில் பேருந்து வர மார்பின் மீது ஏறியது. உடனடியாக ராயபேட்டை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்த விக்னேஷ் முறையாக பைக் ஒட்டக்கூடிய இளைஞர்.சமீபத்தில்தான் பைக் வாங்கியதாகவும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து ஓட்டுபவர் என்றும் அவர் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios