abirami ramanthan pressmeet about gst

இன்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி அமலுக்கு வரும் நிலையில் சினிமா டிக்கெட் விவரம் குறித்து தமிழக அரசு தெளிவு படுத்தாததால் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திங்கள் கிழமை முதல் தியேட்டர்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையிலான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை இன்று நள்ளிரவு முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கான அறிமுக விழா இன்று நள்ளிரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் அமித் அன்சாரி, மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மக்களவை துணைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது. இந்நிலையில் சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பேசிய அபிராமி ராமநாதன் திங்கள் கிழமை முதல் தியேட்டர்கள் இயங்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் கூடுதலாக வரி விதித்துள்ளதாகவும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டிற்கு ஜிஎஸ்டி வரி குறித்து தெளிவு இல்லை எனவும் தெரிவித்தார்.