Asianet News TamilAsianet News Tamil

ஆவின் பால்பாக்கெட் விலை திடீர் உயர்வு.. எவ்வளவு உயர்வு.? எந்த நிற பால் பாக்கெட்டிற்கு தெரியுமா.?

ஆவினில் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆவின் டிலைட் என்னும் பெயரில் Violet நிற பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது ஆரஞ்சு நிற பாக்கெட்டை விட 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

Aavin packet milk price has increased in Tirunelveli KAK
Author
First Published Nov 16, 2023, 11:05 AM IST | Last Updated Nov 16, 2023, 11:08 AM IST

ஆவின் பால் விலை.?

பெரியவர்கள் முதல் குழந்தைகளை வரை குடிப்பதற்கு ஆவின் பால்பாக்கெட் வாங்கி வருகின்றனர். ஆவின் பால் பாக்கெட்டானது பச்சை, ஆரஞ்ச், ஊதா என பல்வேறு நிறங்களில் கொழுப்பு சத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் திருநெல்வேலி ஆவின் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  நமது ஒன்றியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் Cow Milk ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் 15.11.2023 முதல் நிறுத்தம் செய்யப்பட்டு 16.11.2023 முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் Violet நிற பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆவின் டிலைட் 200 மிலி பாக்கெட் விற்பனை விலையிலும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Aavin packet milk price has increased in Tirunelveli KAK

200 மி.லி பால் பாக்கெட் விலை அதிகரிப்பு

அதன் படி ஆவின் டிலைட் 200 மிலி பாக்கெட் பால் முகவர்களுக்கு 9.66 ரூபாய்க்கும், விற்பனை விலை 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே  ஆவின் முகவர்கள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் வங்கியில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மண்டல பொறுப்பாளர்கள் மேற்கண்ட விலையில் பணம் வசூல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை விட ஆவின் டிலைட்  Violet நிற பாக்கெட்டுகள் 50 காசுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேதி வெளியீடு..! ரிசல்ட் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios