ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; ஆர்.கே.சுரேஷ்க்கு போலீஸ் வலை வீச்சு

ஆருத்ரா நிதிநிறுவன மோசடி விவகாரத்தில் திரை பிரபலமும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

aarudhra money laundering case economic offences wing officers summan to rk suresh

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகள் அமைத்து மிகவும் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்த நிதி நிறுவனம் ஆருத்ரா. பொதுமக்களிடம் குறைந்த பட்சமாக ரூ.1 லட்சம் முதலீடாக பெற்று அதற்கு 15 முதல் 25 சதவீதம் வரை வட்டியாக கொடுப்பதாகக் கோரி கோடிக் கணக்கில் முதலீடுகளைப் பெற்றது.

மேலும் தங்கள் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி, தங்க நாணயம் என பல்வேறு சூப்பர், டூப்பர் ஆபர்களை அறிவித்து முதலீடுகளை வாரி குவித்தது. சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்ற பின்னர் இந்நிறுவனத்தின் மீது சந்தேகம் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்நிறுவனம் தொடர்பான அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு முதலீடுகளை பெற தடை விதித்தனர்.

பழனி கோவிலுக்கு வந்த பக்தர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு; கோவில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட பலருக்கும் எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

aarudhra money laundering case economic offences wing officers summan to rk suresh

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரூசோவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதாகக் கூறி நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் தங்களிடம் ரூ.15 கோடி பெற்றுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை இதன் மீது எந்தவித பணியும் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகக் கூறி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவையில் பொது இடத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்

மேலும் பாஜக பிரமுகரான ஆர்.கே.சுரேஷ் மத்திய அரசில் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை நீா்த்துப்போகச் செய்வதாக அவர் தெரிவித்ததாகவும் ரூசோ தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு தொடர்பாக ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். ஷ

இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக ஆர்.கே.சுரேஷ் தமிழகத்திலேயே இல்லை என்றும், 2 மாதங்களுக்கு முன்பே அவர் துபாய் சென்றுவிட்டதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios