சென்னை அடையாறில் பொறியியல் மாணவிக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் ஐ.நா. அலுவலகத்துக்கு எதிராக இருக்கும் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் வட மாநில காவலாளி ஒருவன் குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறான்.

அவன் பெயர் நிருபய் குமார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவன் வீடு புகுந்த அந்த மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த மாணவி தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றிருக்கிறார், அப்போது அவன் அந்த மாணவியை சுவற்றில் அடித்து தலையை உடைத்து ரத்து காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த மாணவி அலறிய காரணத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து மாணவியை காப்பாற்றியிருக்கிறார்கள். இதனையடுத்து அடையாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்து தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வடமாநில இளைஞரான நிருபய் குமார், இதுபோன்று பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால் கைக்குழந்தையை கொன்ற பெண்”

புனே, விசாபுர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஆர்யன் என்ற 7 மாத மகன் இருந்தான். ஆர்யன் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தான்.

குழந்தையின் தாத்தா அவனது சாவில் மர்மம் இருப்பதாக அங்குள்ள போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது, குழந்தை ஆர்யன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அர்ஜூன் மற்றும் சுனிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சுனிதா குழந்தையை வாயைப்பொத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சுனிதாவை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணம் முடிந்த 2 மாதத்தில் நான் கர்ப்பம் ஆனேன். எனவே எனது கணவர் எனக்கு திருமணத்திற்கு முன்பே வேறு நபருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார்.

இந்தநிலையில் எனக்கு பிறந்த குழந்தையும் உறவினர் ஒருவரை போல இருந்ததால் கணவருக்கு என் மீது இருந்த சந்தேகம் அதிகமானது. எனவே குழந்தையை கொலை செய்தேன். இவ்வாறு போலீசில் கூறியுள்ளார்.