ஒயிலாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.! சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
கோவை குனியமுத்தூரில் உள்ள கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களோடு இணைந்து ஒயிலாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியது பொதுமக்களை ரசிக்க வைத்தது.

கோயில் திருவிழாவில் எஸ்.பி.வேலுமணி
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவையை தனது கோட்டை என நிருபித்து காட்டியவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி கொங்கு மாவட்டத்தில் திமுகவிற்கு டப் கொடுத்து வருகிறார். மேலும் கோவை பகுதியில் நடைபெறும் எந்த ஒரு கோயில் திருவிழாவிற்கும் நேரில் செல்லும் எஸ்.பி.வேலுமணி அங்கு நடைபெறும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
அந்த வகையில் ஏற்கனவே கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.
ஒயிலாட்டம் ஆடி அசத்திய எஸ்.பி.வேலுமணி
இதேபோல ஈரோடு இடைத்தேர்தலின் போது அதிமுகவிற்கு வாக்குகளை சேகரிக்க பொதுமக்களை கவரும் வகையில் நடனம் ஆடினார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்து உள்ள சுகுணாபுரம் பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் அருவி ஒயிலாட்ட குழுவினரின் ஒயிலாட்ட நிகழ்வு திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்
குத்தாட்டம் போட்ட எஸ்.பி.வேலுமணி.! குலுங்கிய கோவை..! கோவில் திருவிழா ருசிகரம்..