மனைவி சொன்ன அந்த வார்த்தை.... 

வடபழனியில் மனைவியை கொன்று நாடகமாடிய குருக்கள் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்,அவரது நண்பரும் கைது செய்யப்பட்டார்.

வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால கணேஷ்.இவரது  மனைவி  பிரியா, இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இதுவரை குழந்தைகள் இல்லை.

இந்நிலையில்,கடந்த 5 ஆம் தேதி,காலை மனைவி பிரியா கொல்லப்பட்டு இருந்தார். பாலகணேசின் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தன.மேலும் பிரியாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி காணமல் போயிருந்ததால்,கொளையர்கள் யாரோ இது போன்று செய்துள்ளதாக நினைத்தனர் .

பின்னர்,பிரபுவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரணை  மேற்கொண்டதில்,மனைவியை தானே தன் நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

குழந்தை இல்லாத காரணத்தால் தன்னை "ஆண்மையற்றவன்" என மனைவி வெறுப்பேற்றியதால் மனைவியை சுத்தியால் அடித்து கொன்றதாக கணவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன் நண்பரின் உதவியுடன் இந்த கொலையை செய்துவிட்டு,நகைக்காக  கொள்ளையர்கள் கொலை செய்தது போல நாடமாடியது தெரிய வந்துள்ளது. தற்போது  வெளியாகி  உள்ளதால்,அங்குள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

இந்த  கொலை குறித்து துப்பு துலக்கி குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கணவரே மனைவியை  கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.