Asianet News TamilAsianet News Tamil

Makkal ID : ஆதார் கார்டு போல.. தமிழ்நாட்டு மக்களுக்கென தனி அடையாள அட்டை - தமிழக அரசின் புது அறிவிப்பு

தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசின் சார்பாக ஐடி எண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A separate identity card for the people of Tamil Nadu
Author
First Published Dec 27, 2022, 11:10 PM IST

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் நோக்கமாகும். ஆதாரில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

A separate identity card for the people of Tamil Nadu

இதையும் படிங்க.. TN BJP : துபாய் ஹோட்டலில் 150 பேரு முன்னாடி.! உண்மையை சொல்லுங்க அண்ணாமலை? காயத்ரி ரகுராம் பகீர்!

ஆதார் அட்டையில் ஒருவருக்கு வழங்கப்படும் 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்பட மாட்டது. இந்த முறையை பின்பற்றி தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது 10 முதல் 12 இலக்கங்களில் இருக்கும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாள எண் வழங்க மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. மென்பொருள் தயாரானதும் சில மாதங்களில் அடுத்த  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மென்பொருள் நிறுவனம் தயாரித்து வழங்கக்கூடிய தளம் ஒருசில மாதங்களில் பயன்பாட்டுக்குவரும். அதன்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து, ஆதாரை போன்று கண் விழித்திரை, கைரேகை உள்ளிட்டவற்றை கொண்டு இந்த மக்கள் ஐடி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் வசிப்பவர்கள், பயனடையக்கூடிய திட்டங்களை கண்காணிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க.. AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios