யார் அந்த SIR.? திமுக அரசுக்கு எதிராக இறங்கி அடிக்கும் அதிமுக

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 'யார் அந்த சார்?' என அதிமுக போஸ்டர்கள் ஒட்டி வருகிறது.

A poster was put up on behalf of AIADMK questioning the DMK government on the issue of Anna University student KAK

கல்லூரி மாணவிக்கு பாலியல் கொடுமை

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவ, மாணவிகளும் விரும்பி படிக்க நினைக்கும் கல்லூரியான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவை சேர்ந்த ஞானசேகர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கல்லூரி மாணவி கொடுத்த வாக்குமூலமும், எப்ஐஆரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

A poster was put up on behalf of AIADMK questioning the DMK government on the issue of Anna University student KAK

யார் அந்த சார்.?

அதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகர் தன்னை மிரட்டிய போது, சார் ஒருவருக்கும் நீ ஒத்துழைக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார்,. மேலும் அந்த சம்பவத்தின் போது ஞானசேகரனுக்கு ஒரு போன் காலும் வந்துள்ளது. அதில் மாணவியை மிரட்டி விட்டு அனுப்பி விடுவதாக தெரிவித்துள்ளார் ஞானசேகரன்.  எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார்.? என கேள்வியானது எழுந்துள்ளது. ஆனால் காவல்துறை தரப்போ அப்படி சார் என யாரும் இல்லை. மாணவியை மிரட்டவே தனது போனுக்கு வராத கால்களை காட்டி மிரட்டியுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்த போது யார் அந்த சார் ? ஏன் அவரை கைது செய்யாமல் காவல்துறை மறைக்கிறது என கேள்வி எழுப்பினார். 

A poster was put up on behalf of AIADMK questioning the DMK government on the issue of Anna University student KAK

போஸ்டர் ஒட்டிய அதிமுக

இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த சார் ? என கேள்வி எழுப்பி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? Save our daughter's  என அச்சிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் , சென்னை புறநகர், பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.  இதனிடையே சில இடங்களில் போஸ்டர் ஓட்டிய போது காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios