காவல் அதிகாரி ஒருவர் தனது குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாத பெற்றோருக்கு பொதுவெளியில் அறிவுறை கூறி குழந்தையை பள்ளிக்கு அனுப்பச் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கல்வி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் கல்வி தான் பிரதானம் என்ற மனநிலையில் கல்வி கற்று வருகின்றனர். இருப்பினும் ஒருசில பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் போதிய கல்வி அறிவு இல்லாத காரணத்தால் ஒருசில பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அருகில் உள்ள சிறு குறு நிறுவனங்களில் பணிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் காவல் அதிகாரி ஒருவர் சிறுமியை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரிடத்தில் குழந்தையை பள்ளிக்கு அனுப்புமாறு பொது வெளியில் நின்று கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வ சிஷ்ய அப்யான் திட்டம் குறித்து விவரமாக எடுத்துறைக்கிறார்.

பச்சிளம் பெண் குழந்தை மண்ணில் புதைத்து கொலை; குடிகார தாயின் கொடூர செயலால் அதிர்ச்சி

மேலும் இத்திட்டத்தின் அடிப்படையில் 14 வயது வரை அனைவரும் கல்வி கற்க வேண்டும். அப்படி கல்வி கற்காத பட்சத்தில் இதில் குற்றவாளிகள் குழந்தைகள் கிடையாது. அவர்களை பள்ளிக்கு அனுப்பாதவர்கள் தான் குற்றவாளிகள். இத்திட்டத்தின் படி உங்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆகவே அனைவரும் உங்கள் குழந்தைகளை தயவு கூர்ந்து பள்ளிக்கு அனுப்புங்கள். 

ஸ்டாலின் அதிகம் பேசினால் அரசாங்கம் கலைந்துவிடும் - எச்.ராஜா எச்சரிக்கை

உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உங்களுக்கு உதவி செய்ய நான் தயாராக உள்ளேன் என்று கூறி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காவல் அதிகாரியின் இச்செயல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.