சென்னை ஐசிஎப் கிழக்கு காலனியில் வெள்ளை விளக்குகள் பொருத்தப்பட்ட கிரிக்கெட் மைதானம் ஒன்று நேற்று துவக்கப்பட்டது. இரண்டு பார்வையாளர்கள் மாடங்கள் கொண்ட, அதிநவீன வெள்ளை விளக்குகள் பொருத்தப்பட்ட கிரிக்கெட் மைதானம் நேற்று சென்னை ஐசிஎப் கிழக்கு காலனி, தென்கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப்படை குடியிருப்பு பகுதி அருகே துவக்கி வைக்கப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக கண்காணிப்புத்துறை தலைமை இயக்குநர் திரு.எஸ்.ஆர்.ஜாங்கிட், பிரபல கிரிக்கெட் வீரர்கள் வி.வி.குமார், பிரத்ரெட்டி, ஐசிஎப் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் இந்த கிரிக்கெட் மைதானம் துவக்கி வைக்கப்பட்டது. 

மைதானத்தில் வெள்ளை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், பகல் இரவு ஆட்டங்கள் நடத்த முடியும். ஐசிஎப் ஊழியர்களின் குழந்தைகள், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இங்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.