a man tried to murder police officer in karoor
கரூரில், சொதனையில் ஈடுபட்டு வந்த காவலரை கத்தியால் குத்திவிட்டு சென்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் நேற்று மதியம் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த முரளி என்பவரை, சோதனை செய்தனர்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது மட்டுமில்லாமல், உடன் 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்து உள்ளனர்

இதனை தொடர்ந்து முரளியிடம் வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

கத்தியால் குத்து
பின்னர், கரூர் பேருந்துநிலையம் அருகில் பணியில் இருந்த காவலரை, முரளி தன் மீது ஏன் வழக்கு பதிவு செய்தனர் என்று காவலரிடம் வாக்குவாதம் செய்தார்.

ஒருகட்டத்தில் காவலர் எதிர்பார்க்காத போது முரளி காவலரின் கழுத்தில் தான் வைத்திருந்த கத்தியால் குத்தியதில் காவலர் பலத்த காயம் அடைந்துள்ளார்.ரத போக்கு பெருமளவில் ஏற்பட்டு உள்ளது.
பலத்த காயம் அடைந்த காவலரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பின்னர் போலீசார் முரளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
