a man did suicide in kotturpuram bridge

அடையாறு மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இன்று மாலை சுமார் 5 மணி அளவில், அடையாறு மேம்பாலத்தில் (கோட்டூர் புறம் ) இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலத்தின் மேலிருந்து தண்ணீரில் விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

மேலும்,யார் அந்த நபர்..? தற்கொலை தான் செய்துக்கொண்டாரா..? அல்லது தவறி விழுந்து விட்டாரா..? தற்கொலை என்றால்...அதற்கான காரணம் என்ன என்ற பல கோணத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.