நாகர்கோவிலில் செல்போன் பேசியபடி வந்த இளைஞர், போலிசாரிடம்  விஜய் பாணியில் ஹீரோயிசம் காண்பித்து, வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அங்குள்ள சிக்னல் அருகே நின்றுக்கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி, சாவியை வண்டியிலிருந்து எடுத்து விட்டனர்.

இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் காவலரை தாக்க முயன்றார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நேசமணி போலீசார், தகராரில் ஈடுபட்ட இளைஞரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்விசாரணையில், இவர் பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் ஸ்ரீ நாத் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த  நபர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. காவலரை பணி செய்ய விடாமல் தடுப்பது, காவலரை தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ஸ்ரீ நாத் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மிகவும் விலை உயர்ந்தது. பண பலம் மற்றும் சொந்த ஊரில் தான் பெரிய ஆள் என்பதை நிரூபிக்கும் நோக்கிலும், நடிகர் விஜய் பாணியில், சாவியே எடு.. சாவிய எடு...என திரும்ப திரும்ப ஏற்ற இறக்கத்தோடு, படத்தில் விஜய் சொல்வது போல அமைந்துள்ளது இந்த காட்சி..

படத்தில் வரும் காட்சிகளை பார்க்கும் போது தாமும் ஹீரோ என  நினைத்துக்கொண்டு நிஜ வாழ்கையில் போலீசாரிடம் இப்படி மாட்டிக்கொள்கின்றனர்.