Asianet News TamilAsianet News Tamil

மதுரைக்காரங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி… மீனாட்சி அம்மன் கோயிலுக்கு “புதிய கவுரவம்”!

A Great news for Madurai people on Amman Temple
A Great news for Madurai people on Amman Temple
Author
First Published Oct 2, 2017, 7:00 PM IST


நாட்டில் உள்ள 10 முக்கியமான மிகத் தூய்மையான இடங்கள், சின்னங்கள் குறித்த பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைையும் மத்திய அரசு இணைத்து, “ கிளீனஸ்ட் அய்கானிக் பிளேஸ்” என்று அங்கீகாரத்தையும், கவுரவத்தையும் அளித்துள்ளது.

மேலும், ஸ்வாச் பாரத் அபியான்(தூய்மை இந்தியா இயக்கம்) விருதுக்கு மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு டெல்லயில் இன்று விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை மத்திய குடிநீர் மற்றும் சுகாதராத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் இருந்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் எஸ். அணீஷ் சேகர் ஆகியோர் பெற்றுக்கெண்டனர்.

இந்த விருது குறித்தும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிடைத்துள்ள கவுரம் குறித்தும் மதுரை மாநகராட்சி ஆணையர் அணீஷ் சேகர் கூறியதாவது-

நாட்டின் மிகத் தூய்மையான 10 முக்கிய சின்னங்கள் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மத்திய அரசு சேர்த்து புதிய கவுரவம் அளித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது, வரும் 2018 மார்ச் மாதத்துக்குள் மீனாட்சி அம்மன் கோயில், அதைச் சுற்றியுள்ள வீதிகள் மிகவும் தூய்மையாக பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.11.65 கோடியாகும். பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இதற்கான நிதியை அளிக்கிறது.

மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி இருக்கும் நான் சித்திரை வீதிகளிலும் 50 மீட்டர் இடைவெளியில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. குப்பைகளை தரம்பிரிக்கும் 63 குப்பைத் தொட்டிகள், 4 குப்பை அள்ளும் வாகனங்கள் கோயிலைச் சுற்றி குறிப்பிட்ட இடைவெளியில் வந்துகொண்டே இருக்கிறது.

 பயணிகள் வசதிக்காக 25 பயோ-கழிவறையும்,15 இலவச சுத்தமான குடிநீர் வழங்கும் எந்திரங்களும் நிறுவப்பட்டு இருக்கின்றன.

நடைபாதையை சுத்தமாகப் பராமரிக்க 2 சாலை துப்புரவாளர்கள், பேட்டரி வாகனத்தில் வலம் வந்துகொண்டே இருப்பார்கள்.

 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கோயிலைச்சுற்றி இருக்கும் சித்திரை வீதிகள் , மாசி வீதி, ஆவணி மூல வீதி, வெளி வீதிகள் அனைத்திலும் பிளாஸ்டிக் ஒழிக்கப்படும்.

கோயிலின் கிழக்கு மற்றம் வடக்கு சித்திரை வீதிகளில் உள்ள பூங்காவை பராமரிக்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டு, அதில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர், தோட்டங்களை பராமரிக்க பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios