இலங்கையில் இருந்து செயற்கை களிமண்ணில் மறைத்து, ரூ.42 லட்சம் தங்கத்தை விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வந்த 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து பயணிகள விமானம் நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், மதுரை விமான நிலையத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்தவர்களை சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது அன்சாரி (36), முகமது ரியாஸ் (28) ஆகியோர் சுற்றுலா பயணியாக இலங்கை சென்று திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களது உடமைகளை சோனை செய்தனர்.

அவர்கள் கொண்டு வந்த சூட்கேசில் செயற்கை களிமண்கள் இருந்தன.  அதனை பிரித்து பார்த்ததபோது, தங்கத்தை தூள்களாக வைத்து மறைத்து கொண்டு வந்தது தெரிந்தது. மொத்தம் 1.2 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.42 லட்சம் என கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்கத்தை யார் கொடுத்து அனுப்பியது. யாருககு கொடுக்க இருந்தார்கள் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.